×

உழவர்சந்தை முன்பு தேங்கும் நீரால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி

உடுமலை, மே 19: உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக உழவர்சந்தை முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள்,விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், ரயில் நிலையம் முன்பும் தண்ணீர் தேங்கியுள்ளது.கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெடுஞ்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தவாறு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனத்தில் செல்வோருக்கும் இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள், சாலையின் நடுவில் செல்லும் நிலை உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.கோடை மழைக்கே தண்ணீர் தேங்கினால்,விரைவில் பருவமழை துவங்கும்போது அப்பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்படும்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உழவர்சந்தை முன்பு தேங்கும் நீரால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Kapurgaon Road ,Dinakaran ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்