×

உடுமலை அரசு கல்லூரியில் வரும் 28ம் தேதி மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தொடங்குகிறது

உடுமலை,மே19: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் வரும் 28-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கில இலக்கியம்,பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட 22 பாடப்பிரிவுகள் உள்ளன.முதல் ஷிப்டில் 19 பாடப்பிரிவுகள், இரண்டாம் ஷிப்டில் மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன.கடந்தாண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப்படுகிறது. நாளை (20-ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் கல்லூரி இணைய தளத்தில் தங்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், ஏ சான்றிதழ் பெற்ற தேசிய மாணவர் படை உறுப்பினர்கள், அந்தமான் நிகோபர் பகுதி தமிழர்கள்,பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகள், மாவட்டம் முதல் சர்வதேசம் வரை சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.பொது கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ல் துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.

The post உடுமலை அரசு கல்லூரியில் வரும் 28ம் தேதி மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Udumalai Government College ,Udumalai ,Udumalai Government Arts College ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்