×

பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா

கமுதி, மே 19: கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தில் வல்லப் கணபதி, இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஏராளமான பெண்களும், ஆண்களும் பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். முக்கிய திருவிழாவான நேற்று, இருளப்ப சுவாமி மற்றும் பேச்சியம்மனுக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர், சந்தனம், தயிர் போன்ற 16 வகை மூலிகை அபிஷேக அலங்காரம் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் 51 வெள்ளாட்டு கிடாய்கள் பலியிட்டு, 1008 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து சுவாமிகளுக்கு படையலிட்டு, சுடச்சுட பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு,சுவாமி தரிசனம் செய்து விருந்து சாப்பிட்டு சென்றனர்.

The post பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Pongal Festival ,Pachyamman Temple ,Kamudi ,Vallab Ganapathy ,Irlappa Swamy ,Patala Pachyamman temple ,Udchiurani ,
× RELATED அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்