×

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை வழித்தட திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

கூடலூர், மே 19: கூடலூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று வனத்துறை வெளியிட்டுள்ள புதிய யானை வழித்தட விரிவாக்க திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி தலைமை வகித்து பேசுகையில், யானை வழித்தட விரிவாக்க திட்ட புதிய அறிவிப்பு வெளியான உடனேயே கடந்த 4ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் அவசர கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வனத்துறையின் புதிய யானை வழித்தட விரிவாக்க திட்டத்தை கைவிடக் கோரி எம்பி ராசா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோரிடம் நேரில் சந்தித்து மனு அளித்து பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட கலெக்டரையும் சந்தித்து நேரில் விளக்கம் அளித்து திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்பி உள்ளிட்டோரி பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்களை பாதிக்கும் புதிய யானை வழித்தட விரிவாக்கத் திட்டத்தை முற்றிலும் கைவிட நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளனர். இப்பிரச்னைக்கு பாதிப்புகள் இல்லாத வகையில் இறுதியாக நல்ல தீர்வு கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் இப்ப பிரச்சனையில் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கூடலூர் நகர திமுக செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் லியகத் அலி, காங்கிரஸ் வட்டார தலைவர் அம்சா, சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் வாசு, சிபிஐ வட்டார செயலாளர் முகமது கனி, முஸ்லிம் லீக் மாநில செயற்குழு உறுப்பினர் நாசர், விசிக சகாதேவன், மக்கள் நீதி மையம் பாபு, மனித நேய ஜனநாயக கட்சி அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை வழித்தட திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Kudalur ,Forest Department ,MLA ,Dravidamani ,
× RELATED வனத்துறை வெளியிட்டுள்ள புதிய யானை...