×

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வெளியிட ரூ.100 கோடி தருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என்று பாஜ தலைவர் தேவராஜகவுடா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவகுமார் மறுப்பு தெரிவித்து ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வைரலானதை தொடர்ந்து அது குறித்து சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரஜ்வல் வீடியோவை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தான் வெளியிட சொன்னார் என்று ஹாசன் மாவட்ட பாஜ தலைவர் தேவராஜகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘தேவராஜ கவுடாவிடம் நான் ரூ.100 கோடி பேரம் பேசியிருந்தால் லோக்ஆயுக்தா அல்லது வேறு ஏதாவது ஏஜென்ஸியிடம் என் மீது புகார் கொடுக்கட்டும். அவருக்கு மனதளவில் பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கக்கூடாது. சிறையில் இருக்கும் ஒரு நபர் எப்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற அனுமதிக்கலாம்? இதுகுறித்தெல்லாம் கருத்து கூறவே நான் விரும்பவில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதில் காங்கிரஸ் அரசு உறுதியுடன் செயல்படுகிறது. எஸ்.ஐ.டி சரியான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்’ என்றார்.

The post பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Prajwal ,D. K. Sivakumar ,Bangalore ,Deputy Chief ,T.D. K. BAJA ,DEVARAJAGUDA ,SHIVAKUMAR ,K. Sivakumar ,Devakawuda ,D. ,Sivakumar ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார் பிரஜ்வல் போலீஸ்காவல்...