×

மோகனூரில் இடைவிடாமல் பெய்த மழை

மோகனூர், மே 19: மோகனூரில் நேற்று மாலை சுமார் 5 மணி முதல் வானம், மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறய தூறலாக காணப்பட்ட நிலையில், 6 மணிக்கு கன மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ததால் பரமத்தி வேலூர் சாலை, வள்ளியம்ன் கோயில், ரயில்வே பாலம் சாலை மற்றும் சுப்ரமணியபுரம் மற்றும் நாமக்கல் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமப்பட்டன. இடைவிடாமல் பெய்த மழையால் குளிர்ச்சியான சிதோன நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மோகனூரில் இடைவிடாமல் பெய்த மழை appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Paramathi Vellore Road ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது