×

ராசிபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

நாமக்கல், மே 19: நாமக்கல் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்ஐ துர்கைசாமி மற்றும் போலீசார் நேற்று ராசிபுரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. அவர்கள் சேலம் நிலவாரப்பட்டியை சேர்ந்த மணி (25), ராசிபுரம் மூலக்காடு இந்திரா நகர் சுரேந்திரன் (22) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் தாசநாயக்கம்பட்டி சுடுகாட்டில் மேலும் 6 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post ராசிபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,Namakkal Liquor Prohibition Division ,Inspector ,Ambika, ,SI Durgaisamy ,
× RELATED வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு...