×
Saravana Stores

ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

அஞ்சுகிராமம், மே 19: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமை பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது. இம் முகாம், கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவில் அண்ணா பல்கலைக்கழகம் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயந்தி, பஞ்சலிங்கபுரம் ஊராட்சி தலைவர் சிந்து, துணைத் தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலர் தங்க ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

முகாமில் பஞ்சலிங்கபுரத்தில் கால்வாய் சீரமைப்பு பணி,சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வு, நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு, ஆலயங்கள் துப்புரவு பணி, பள்ளி வளாகம் துப்புரவு பணி,ஆளுமை திறன் வளர்ச்சி நிகழ்வுகள்,மின் சிக்கனம் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமும் நடைபெற்றது. முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்ட மாணவ, மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர். முகாமை கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியர் எபி செல்வகுமார் மற்றும் டாக்டர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

The post ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Rohini College National ,Welfare Project Special Camp ,Anjugram ,Rohini College of Engineering and Technology ,Balkulam ,Anna University ,Chennai ,Panchalingapuram Panchayat Community Welfare Centre ,Rohini College ,National Welfare Program Special Camp ,Dinakaran ,
× RELATED அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் கைது