×

பாம்பன் பகுதியில் தெருநாய் கடித்து 20 பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் முருகன் கோயில் கடற்கரையையொட்டி அதிகளவு மீனவ மக்கள் வசிக்கின்றனர். நேற்று காலை அப்பகுதியில் சுற்றிய ஒரு தெருநாய், மீனவர் செல்வத்தின் கையில் கடித்தது. தொடர்ந்து அப்பகுதியில் திறந்து கிடந்த வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மேல் பாய்ந்து கடித்தது. இதில் மீனவர் அடிமை, அவரது மகள் பெமினா இருவருக்கும் கை, கால், உடல்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அதேபோல் இன்னாசி என்பரையும் அவரது வீட்டில் இருந்த 3 வயது குழந்தையையும் சரமாரியாக கடித்தது. அடுத்தடுத்து நாய் கடித்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post பாம்பன் பகுதியில் தெருநாய் கடித்து 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pampan ,Rameswaram ,Pampan Murugan Temple ,Selvam ,
× RELATED கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும்...