×

போலி ஆதார் கார்டு தயாரித்து திருப்பூரில் தங்கிய வங்கதேச வாலிபர்கள் 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 வங்கதேச வாலிபர்களை கண்டுபிடித்தனர். அவர்களை நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் வங்க தேசத்தை சேர்ந்த நஷ்ரூல் இஸ்லாம் (26), பைசல் அகமது (35) என்பதும், இவர்கள் 2 பேரும் பனியன் நிறுவனத்தில் போலியாக தயாரித்த ஆதார் கார்டுகளை கொடுத்து வேலைக்கு சேர்ந்து இருப்பதும் தெரியவந்தது. இதன்பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் அழைத்து வரப்பட்ட 3வது நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சரியானதா? என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post போலி ஆதார் கார்டு தயாரித்து திருப்பூரில் தங்கிய வங்கதேச வாலிபர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,North State ,
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் உட்பட 2 பேர் கைது