×

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தனி விமானத்தில் ஆந்திர முதல்வர் லண்டன் பயணம்: குடும்பத்துடன் சுற்றுலா புறப்பட்டார்

திருமலை: ஆந்திராவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் தனி விமானத்தில் முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆந்திராவில் கடந்த 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலாவாக தனி விமானத்தில் நேற்றுமுன்தினம் புறப்பட்டு சென்றார்.

இதற்காக நேற்றுமுன்தினம் தாடேப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கன்னவரம் விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் இரவு 11 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பாம்பார்டியர் 7500 ரக தனி விமானத்தில் நேரடியாக லண்டனுக்கு புறப்பட்டார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஜாமீனில் உள்ள நிலையில், லண்டனுக்கு வரும் 31ம் தேதி வரை சுற்றுலா செல்வதற்காக கடந்த வாரம் சிபிஐ நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு புறப்பட்ட முதல்வரை அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

The post வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தனி விமானத்தில் ஆந்திர முதல்வர் லண்டன் பயணம்: குடும்பத்துடன் சுற்றுலா புறப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Andhra Chief Minister ,London ,Tirumala ,Chief Minister ,Jaganmohan ,Andhra Pradesh ,Assembly ,Lok Sabha elections ,
× RELATED லண்டன் பயணம் முடிந்து ஆந்திரா...