×

என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: அதானி மோசடிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மோடி என்னுடன் விவாதத்துக்கு வர மாட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல் கூறியதாவது, “பிரதமர் மோடி தனக்கு பிடித்த பத்திரிகையாளர்களுக்கு இடைவிடாமல் பேட்டி தருகிறார். ஆனால் சில விருப்பமான தொழிலதிபர்களுடன் அவருக்கு(மோடி) இருக்கும் தொடர்பு மற்றும் தேர்தல் பத்திரங்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு அவரால்(மோடியால்) பதில் சொல்ல முடியாது என்பதால் என்னுடன் விவாதம் நடத்த மோடி வர மாட்டார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக உழைத்து டெல்லியில் 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் நரகவாதிகளிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பதும், முதல்வர் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு வாக்களிப்பதும்தான் அந்த சுவாரஸ்யம்” என்று கூறினார்.

The post என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rahul Gandhi ,New Delhi ,Former ,Congress ,President ,Modi ,Congress party ,Delhi ,Rahul ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...