×

ஜெகதீப் தன்கர், தேவகவுடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி தன் டிவிட்டர் பதிவில், “தன்கர் தன் வளமான சட்ட அனுபவம் காரணமாக இந்திய அரசியலமைப்பை பற்றிய ஆழமான புரிதலை கொண்டுள்ளார்.

அவர் பொதுசேவையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார். நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எப்போதும் பணியாற்றுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் 91வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஜெகதீப் தன்கர், தேவகவுடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Jagadeep Dhankar ,Deve Gowda ,PM Modi ,New Delhi ,Modi ,Vice President ,Jagdeep Dhankar ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...