×

ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை தடுத்த மேற்கு வங்க ராஜ்பவன் அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் மீது புகார் கொடுப்பதற்கு செல்லவிடாமல் தடுத்ததாக ராஜ்பவன் அதிகாரிகள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்பவனில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் தன்னை ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே போலீசார் பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு குழு அமைத்தனர். இந்த வழக்கில் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து ஆளுநரது பெயரை குறிப்பிடாமல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண்ணை புகார் செய்ய விடாமல் தடுத்ததற்காக ராஜ்பவனை சேர்ந்த 3 அதிகாரிகள் மீது ஹரி ஸ்ட்ரீட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை தடுத்த மேற்கு வங்க ராஜ்பவன் அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : West Bengal Rajbhavan ,Kolkata ,West Bengal ,Rajbhavan ,Governor ,Ananda ,
× RELATED கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’...