×

தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் மேம்பால பணிக்காக வைத்திருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரியின் டயர்கள், தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கன்டெய்னர் லாரி ஒன்று பார்சல் பொருட்களை ஏற்றிக் கொண்டு, சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மேம்பால பணிக்காக வைத்திருந்த தடுப்பு மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் முன் பகுதி சேதமடைந்து, முன் பக்க இரண்டு டயர்களும் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், கன்டெய்னர் லாரியில் இருந்த டீசல் டேங்க்கில் சேதம் ஏற்பட்டு டீசல் சாலையில் கொட்ட தொடங்கியதால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அவளூர் போலீசார் வந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள் appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Bengaluru, Karnataka ,Chennai ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...