×

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவு:49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட தேர்தம் கடந்த 7-ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதியும், 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, 8உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (20-ம் தேதி) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.5ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் 6ம் கட்ட தேர்தல் 25-ம் தேதியும், 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது

The post மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவு:49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Lok Sabha elections ,Rahul Gandhi ,Repareli ,Rajnatsing ,Lucknow ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல்...