×

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன்.. முடிந்தால் கைது செய்யுங்கள்.. பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

டெல்லி: நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்; பாஜகவினர் சிறை விளையாட்டு விளையாடுகின்றனர். ஆம் ஆத்மியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சென்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளேன். நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளேன். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும் இவ்வாறு கூறினார்.

The post நாளை பாஜக அலுவலகம் வருகிறேன்.. முடிந்தால் கைது செய்யுங்கள்.. பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,PM Modi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,BJP ,Aam Atmi Party ,Aam Aadmi ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...