×

கேரளாவில் டெங்கு பரவுகிறது: 4 மாதங்களில் 43 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். ஆனாலும் நோயின் தீவிரம் இதுவரை குறையவில்லை. கோழிக்கோடு உள்பட ஒரு சில பகுதிகளில் வெஸ்ட் நைல் காய்ச்சலும் பரவி வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 30ம்தேதி வரை டெங்கு காய்ச்சல் பாதித்து கேரளாவில் 43 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 மாதங்களில் 4576 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,387 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கமாக மழைக்காலங்களில் தான் இந்த காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது கோடைகாலத்திலேயே டெங்கு காய்ச்சல் பரவுவது கேரளா மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கேரளாவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

The post கேரளாவில் டெங்கு பரவுகிறது: 4 மாதங்களில் 43 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...