×

திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு

திருப்பூர்: திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். யாசகம் பெற்று வந்தவர்கள் காப்பகத்திற்கு செல்லாமல் மறுத்து வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களை மாநகராட்சி சார்பில் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர் அப்பொழுது அங்கே யாசகம் பெற்று வந்த முதியவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அவர்களை வாகனத்தில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாநகராட்சிக்கு உட்பட்ட காப்பகங்களில் சேர்த்து பாதுகாக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Kalyan Central Bus Station ,Yasakam ,Central ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்