×

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியபோது மலைப்பாதை பாறையில் மோதிவேன் கவிழ்ந்து விபத்து

*தமிழக பக்தர்கள் 10 பேர் காயம்

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியபோது மலைப்பாதை பாறையில் வேன் மோதி கவிழ்ந்தது. இதில் தமிழக பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக பக்தர்கள் நேற்றுமுன்தினம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்ட பிறகு சொந்த ஊர் செல்ல வேனில் திருப்பதி நோக்கி நேற்று வந்துகொண்டிருந்தனர்.

அப்போது மலைப்பாதையில் வரும்போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மலைப்பாதை பாறையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் கவிழ்ந்து, அனைத்து பக்தர்களும் அலறியபடி கூச்சலிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜிலென்ஸ் அதிகாரிகள் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைத்து வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். திருமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியபோது மலைப்பாதை பாறையில் மோதிவேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati Seven Mountain ,Tirumala ,Tirupati ,darshan ,Tamil Nadu ,Swami ,Tirupati Eyumalayan temple ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்