×

அரியானாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி

அரியானா: அரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி ஆகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து அரியானா சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனிய யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பயணித்து உள்ளனர். இந்நிலையில், புனித தலம் ஒன்றிற்கு சென்று விட்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்காக அவர்கள் பஸ்சில் திரும்பி கொண்டு இருந்துள்ளனர்.

அந்த பஸ் நேற்றிரவு அரியானாவின் குண்டலி-மனேசர்-பால்வால் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, நூ என்ற இடத்திற்கு அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் வந்தபோது, திடீரென பஸ்சில் தீப்பற்றி கொண்டது. அந்த பஸ்சில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பயணித்து உள்ளனர். பஸ் தீப்பற்றியதும், அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கவனித்து இருக்கிறார்.

உடனடியாக பஸ்சை முந்தி சென்று ஓட்டுநரிடம் தீப்பிடித்தது பற்றி எச்சரித்து உள்ளார். இதன்பின்பு, பஸ் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தீயை அணைக்கும் மற்றும் பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, பஸ் முற்றிலும் எரிந்து போன பின்னர், 3 மணிநேரம் கழித்தே தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு வந்தனர்.

தீ பரவும் முன்னர், ஓடி சென்று பஸ்சின் ஜன்னலை உடைத்து, எங்களால் முடிந்தவரை உள்ளே இருந்த பலரையும் மீட்டோம். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் நீண்ட நேரத்திற்கு பின்னரே வந்து சேர்ந்தனர் என கூறியுள்ளனர். பஸ் தீப்பிடித்து எரிந்ததற்கான உறுதியான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

The post அரியானாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Ariana ,Nuh, Ariana ,Madura ,Uttar Pradesh ,
× RELATED பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து...