×

புதுக்கோட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவது குறித்த பயிற்சி

 

புதுக்கோட்டை, மே 18: சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட வண்டிப்பேட்டை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டரை எப்படி கையாளுவது ஆபத்து காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சிலிண்டர் வரும்போது சோதனை செய்து வாங்க வேண்டும்,

சிலிண்டர் அடுப்பில் பொருத்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்றும் அடுப்பை பாதுகாப்பாக பற்ற வைப்பது ஆபத்துக் காலங்களில் சிலிண்டர் கசிவு ஆனால் எவ்வாறு சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை இந்தியன் ஆயில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரேமா தொடங்கி வைத்தார். மேலும் இந்த பயிற்சியில் இந்தியன் ஆயில் ஏஜென்சி ஊழியர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவது குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Indian Oil Company ,Vandipettai ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...