×

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது: 28 சவரன் நகைகள், 2 டூவீலர்கள் பறிமுதல்

 

பெரம்பலூர்,மே18: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த 6 வழிப்பறி சம்பவங் களில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 28 சவரன் நகைகள், 2 இரு சக்கர வாகனங்கள் பறி முதல் செய்து பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வழிப்பறி வழக்குகளை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறிய மாவட்ட எஸ்பி காவல் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி,பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச் சாமி வழிகாட்டுதலின் படி,

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை யில், சப்.இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் ஏட்டுகள் அலேக்சாண்டர், முனீஸ்ராஜா மற்றும் போலீ சார் கிருஷ்ணக்குமார், கார்த்திக் ஆகியோர் அடங் கிய தனிப்படையினர் தீவிர விசாரணை செய் தும், கண்காணிப்பு கேம ராக்களை ஆய்வு செய்ததி லும் மேற்படி குற்ற வழக்கு களில் ஈடுபட்டது, திருவா ரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, தென்பரை கிரா மம், காமண்டி தெருவைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் சூரியவர்மா (32) என்பது வும், அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த குற்ற வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் இருந்த தும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சூரியவர்மாவை மதுரை சிறையிலிருந்து நீதிமன்ற காவலில் எடுத்து, விசா ரணை செய்த தனிப்படை யினர் அவரிடமிருந்து 7 வழக்குகளில் தொடர்பு டைய 28 சவரன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சூரியவர்மாவைமீண்டும் மதுரை மத்திய சிறைக்கு நேற்று அனுப்பிவைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை யினரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது: 28 சவரன் நகைகள், 2 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Savaran ,Perambalur district… ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...