×

ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

 

ஊட்டி, மே 18: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து தடைப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளன.

இதனால், நாள்தோறும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒரு புறம் இருக்க நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சில சமயங்களில் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிய விட்டுவிடுகின்றனர். இவைகள், கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதாலும், ஒன்றுடன் ஒன்று விளையாடி அல்லது மோதிக் கொண்டு வாகனங்கள் மீது மோதுகின்றன.

இதனால், வாகனங்கள் பழுது அடைவது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நகரில் கால்நடைகள் மற்றும் குதிரைகள் வர அனுமதிக்கக்கூடாது, என நகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. ஆனாலும், கால்நடை மற்றும் குதிரை உரிமையாளர்கள் இதனை கண்டுக் கொள்வதில்லை. தற்போது ஊட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் கால்நடைகள் வலம் வருகின்றன. எனவே, இவைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty City ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...