×

திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்தது

 

உடுமலை,மே18: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும்.இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

இதுதவிர, திருமூர்த்தி மலையில் குருமலையாறு,குழிப்பட்டி பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. தற்போது, கோடை வெயில் கொளுத்துவதாலும்,மழையின்மை காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கான்டூர் கால்வாயிலும் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு,பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
அணையில் நேற்றைய நீர்மட்டம் 21.20 அடியாக இருந்தது.சமீபத்தில் பெய்த மழை காரணமாக 92 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக 26 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Thirumurthy Dam ,Udumalai ,Thirumurthi dam ,Tirupur district ,PAP ,Coimbatore ,Tirupur ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்