×

இ.கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம்

சிவகங்கை, மே 18: சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் மருது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட பொருளாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சின்னக்கருப்பு, மாதவன், குணாளன், காமராஜ் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் நியமனம் மற்றும் தேவையான உபகரணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியைச் சுற்றி உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சிவகங்கை நகர்ப்பகுதியில் பெருகிவரும் தெரு நாய்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சிவகங்கையில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் மதுரை, மானாமதுரை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல இரவு நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அண்ணாமலை நகர் பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post இ.கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : E. Communist District Committee ,Sivagangai ,Communist Party of India ,City Secretary ,Marudu ,MLA ,Ramasamy ,district secretary ,Sathya ,district treasurer ,Raja ,E.Communist district committee ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு...