×

பள்ளங்களில் தேங்கும் மழைநீர் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை மே 18:திருவாடானை அருகே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கீரமங்கலம் பழைய தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள வீதியில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ஆங்காங்கே பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்தப் பகுதியில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் மேடு, பள்ளம் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தேங்கியுள்ள தண்ணீரால் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. விஷ பூச்சிகள் தண்ணீருக்குள் சென்றால் தெரியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளங்களில் தேங்கும் மழைநீர் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Chinnakeeramangalam ,Trichy-Rameswaram National Highway ,
× RELATED திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில்...