×

என்னுடைய மகனையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்: ரேபரேலியில் சோனியா காந்தி உருக்கம்

ரேபரேலி: என்னுடைய மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் கொடுக்கிறேன், அவர் உங்களை ஏமாற்ற மாட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசினார். உபி மாநிலத்தில் காங்கிரசின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 20ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ரேபரேலியில் காங்கிரஸ் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில்,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சோனியா பேசுகையில்,‘‘இந்திரா காந்தியின் இதயத்தில் முக்கிய இடம் பெற்றது ரேபரேலி தொகுதி ஆகும். இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்று கொடுத்த பாடங்களை தான் ராகுலுக்கும்,பிரியங்காவுக்கும் கற்று கொடுத்தேன். அனைவரையும் மதிக்கவும், பலவீனமானர்களை பாதுகாக்கவும், மக்களின் உரிமைகள் மற்றும் அநீதிக்கு எதிராக போராடவும் பயப்பட வேண்டாம் என்பதை சொல்லி கொடுத்துள்ளேன். இங்கு உள்ள மக்கள்தான் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளனர். 20 ஆண்டுகள் இந்த தொகுதி எம்பியாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீங்கள் என்னை உங்களுடையவராக கருதுகிறீர்கள். சகோதர, சகோதரிகளே என் மகனையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர் நிச்சயம் உங்களை ஏமாற்ற மாட்டார்’’ என உருக்கமாக பேசினார்.

The post என்னுடைய மகனையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்: ரேபரேலியில் சோனியா காந்தி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Rae Bareli ,Raebareli ,Rahul ,Congress ,president ,Rahul Gandhi ,UP. 20th ,
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...