×

ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் முதலிக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (35). தனியார் பள்ளியில் டிரைவர். கடந்த 14ம்தேதி, அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவர், ஊட்டிக்கு காரில் சுற்றுலா செல்வதற்காக, இவரை மாற்று டிரைவராக அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், நேற்று சேலத்தில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு வந்த பஸ், அதிகாலை 3 மணியளவில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ்சில் சபரி, சபரி சடலமாக மீட்கப்பட்டார். ஊட்டிக்கு சுற்றுலா சென்றவர்களை அழைத்துச் சென்ற சபரி, பஸ்சில் சடலமாக வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சபரியை மாற்று டிரைவராக அழைத்து சென்ற பெருமாளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kaveripatnam ,Sabari ,Mudalikankottai ,Panneeswaramadam ,Krishnagiri district ,Perumal ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...