×

தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக மாஜி அமைச்சர்கள் பாஜவுக்கு தாவுகிறார்களா? உதயகுமார் பேட்டி

திருமங்கலம்: மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜவுக்கு செல்கிறார்கள் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கமளித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘அதிமுகவில் எந்த குழப்பங்களும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்துதான் பொதுச்செயலாளராக ஆக்கினோம்.

அவரது தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்தோம். தற்போது சிலர் அதிமுகவில் வீண் குழப்பம் ஏற்படுத்த நினைத்து, தேர்தல் முடிவுக்கு பின் சில முன்னாள் அமைச்சர்கள் பாஜவில் இணைவார்கள் என கூறுகின்றனர். இது கட்டுக்கதை. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எங்களுக்குள் எவ்விதமான இடைவெளி, கருத்து வேறுபாடு இல்லை’’ என்றார்.

The post தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக மாஜி அமைச்சர்கள் பாஜவுக்கு தாவுகிறார்களா? உதயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Udayakumar ,Tirumangalam ,Former minister ,Lok Sabha elections ,Former ,minister ,Kunnathur ,Tirumangalam, Madurai district ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்