×

ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

சென்னை: சமூகநீதி, பெண்ணுரிமைக்காக பாடுபட்ட ஜெயலலிதா குறித்து உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது. அதிமுக தலைவர்கள் கடைபிடித்த கோட்பாடுகள் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துதான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முகவரி தேடவே ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசுகிறார் என்று அவர் கூறினார்.

 

The post ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,RB ,Udayakumar ,Annamalai ,Chennai ,AIADMK ,minister ,RB Udayakumar ,Jayalalithaa ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…