×

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாரபங்கி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி கட்சிகள் ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார். புல்டோசர்களை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத்த கூடாது என யோகி ஆதித்யநாத்திடம் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி டியூசன் படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை பறித்து தங்களுக்கு வாக்கு வங்கியாக இருப்பவர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக தான் யோகி ஆதித்யநாத் புல்டோசரை ஏற்றுகிறார். இதை தான் பிரதமர் ஆதரிக்கிறாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ram ,PM Modi ,Congress ,Samajwadi ,Barabanki ,Modi ,India ,Ayodhi Ramar temple ,Barabangi, Uttar Pradesh ,Ramar ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...