×

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வௌியில் வந்த கெஜ்ரிவால் மக்களவை தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் 8-வது குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கின் குற்றப்பத்திரிகையில் கட்சி ஒன்றின் பெயர் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதனிடையே அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய கெஜ்ரிவால் வழக்கில் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தவறு செய்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காதவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக ED தரப்பில் வாதிடப்பட்டது. கைதுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதே சட்டத்துக்கு தேவையே தவிர குற்றம் நடந்ததாக நம்பப்படுகிறது என்பது தேவையில்லை. இந்த இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என நீதிபதி தெரிவித்தார். தவறு செய்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காதவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Amatmi ,Delhi ,Chief Minister ,Yes ,Atmi ,Kejri ,Dikhar ,
× RELATED இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரி...