×

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மும்பையில் கடந்த 13ஆம் தேதி 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீசியது . குறிப்பாக மும்பையின் வடாலம் பகுதியில் புழுதி புயல் வீசியதன் காரணமாக ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இந்த விபத்தில் 67 பேர் மீட்கப்பட்டனர். ராட்சத இரும்பு விளம்பரப் பலகை சரிந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சாலையோரம், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னைக்குள் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. மும்பை புழுதி புயல் சம்பவத்துக்கு பிறகு அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. இதில், 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போதுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவைதான். அவற்றை அகற்றி வருகிறோம். உரிய அனுமதி பெற இதுவரை 1100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

The post சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,MUNICIPAL ,Chennai Municipal Corporation ,Mumbai ,northern ,Chennai Municipal Council ,
× RELATED “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல்...