×

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, மதிச்சியம் பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் நேற்று தூங்கி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது கனமழை பெய்ததால் திடீரென அவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே தூங்கிக்கொண்டு இருந்த பாலசுப்பிரமணியம் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணையும் செய்து வருகிறார்கள். கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Tirupur ,Thoothukudi ,Virudhunagar ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...