×

வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்வு!!

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது. மருதாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து 59 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக மருதாநதி அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

The post வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Marudhanadi dam ,Wattalakundu ,Vathalagundu ,Ayyampalayam ,Western Ghats ,Marudanadi ,Marudanadi dam ,
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது