×

அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு

அரியலூர், மே 17: அரியலூர் நகராட்சி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய டெங்கு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அரியலூர் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வகீல், சிவசங்கரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜா, மாவட்ட சுகாதார அலுவலக ஆய்வாளர் தமிழ்மணி, நிலைய சுகாதார ஆய்வாளர்கள் அருண் பாண்டியன், விக்னேஸ்வரன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். பயிற்சி மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மருந்தாளுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : National Dengue Day ,Ariyalur Govt ITIL ,Ariyalur ,District Public Health Department ,Ariyalur Municipality and ,Government Vocational Training Center ,Municipal Commissioner ,Maheshwari ,Ariyalur Old Municipal Office Complex ,Ariyalur Government ITIL ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை, எடையூர் பகுதிகளில்...