×

கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது

 

கோவை, மே 17: கோவை மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி பகுதியில் தக்காளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் தக்காளி வரத்து இருந்து வருகிறது. தற்போது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட உள்ளூர் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து தக்காளி வரத்து உள்ளது.

மேலும், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்தும் வரத்து உள்ளது. ராயக்கோட்டை, மைசூரில் இருந்தும் கடந்த சில நாட்களாக வரத்து குறைந்துள்ளது. பொதுவாக 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்து இருக்கும் மார்க்கெட்டில் தற்போது 2,800 பெட்டிகள் வரத்து மட்டுமே உள்ளது. வரத்து குறைந்து இருந்தாலும் தக்காளி விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

அதன்படி, மொத்த விலையில் 22 கிலோ எடை கொண்ட ராயக்கோட்டை நாட்டு தக்காளி ரூ.350 முதல் ரூ.400க்கும், மைசூரில் இருந்து வரும் ஆப்பிள் தக்காளி ரூ.400 முதல் ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மழையின் தாக்கம் இருந்தால், மேலும் வரத்து குறையும் எனவும், வரத்து குறைந்தால் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Erukampeni ,Mettupalayam Road, Coimbatore ,Karnataka ,Kinathukadavu ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...