×

ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானை

 

கூடலூர், மே 17: மசினகுடி பஜார் மாயார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை நேற்று இரவு மீண்டும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. மேலும், ரேஷன் கடையில் இருந்த அரிசி, பருப்பு போன்றவற்றை சாப்பிட்டு சென்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இதே கடையின் ஒரு பகுதியில் உள்ள கதவை உடைத்து அரிசி மூட்டையை வெளியே எடுத்து சாப்பிட்டுள்ளது. இதனை அடுத்து உடைந்த கதவு பகுதியை சிமெண்ட் சுவர் எழுப்பி மூடிவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த யானை கடையில் பிரதான சட்டரை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

 

The post ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானை appeared first on Dinakaran.

Tags : Cudalur ,Masinagudi Bazar Mayar Road ,Dinakaran ,
× RELATED பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள...