×

மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘சென்னை கடற்கரையில் இருந்து 17ம் தேதி (இன்று) பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும். மறு மார்க்கத்தில் அதே நாளில் பிற்பகல் 3.5 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும்.

மேலும் இந்த ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதுமட்டுமின்றி, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இரவு நேர மின்சார ரயில்களும், அதிகாலை மின்சார ரயில்களும் 18ம் தேதி வரை முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது.

The post மின்சார ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu Railway Station ,Chennai Railway Station ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரவு மின்தடையால் பயணிகள் அவதி