×

பெண் ஹோம்கார்டுடன் பழகி நகை, பணத்துடன் ஐடி ஊழியர் எஸ்கேப்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் கவிதா (30). இவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் ஹோம்கார்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்தார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமாணமாகி மனைவியைப் பிரிந்த ஐடி ஊழியர் ஹரீஸ் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு ஹரீஸ், கவிதாவின் 8 சவரன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். ஹரீஸ் குறித்து அவரது நண்பர்களிடம் கவிதா விசாரித்த போது அவர் தனது அத்தை மகளை திருமணம் செய்யச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது நகை பணத்தை மீட்டுத் தரக் கோரியும் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசை தேடி வருகின்றனர்.

The post பெண் ஹோம்கார்டுடன் பழகி நகை, பணத்துடன் ஐடி ஊழியர் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Kavitha ,Adambakkam Periyar ,Parangimalai ,Police Station ,
× RELATED மருத்துவமனையில் கே.கவிதா அனுமதி