×

அர்ச்சகர் சஸ்பெண்ட் விவகாரம் கோயில் நிர்வாகிகளுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் புகார்

சென்னை: மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் விஸ்வகர்ம சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர் கார்த்திக் என்பவர் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நடிகையை சீரழித்த விவகாரத்தை தொடர்ந்து, அவரை கோயில் நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்தனர். இதில் கார்த்திக்கின் மாமா மீதும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் பேசி முடிவு செய்திருந்தனர்.

அப்போது நிர்வாகிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில் நிர்வாகிகளில் ஒருவரான பாலாஜி (27) என்பவரை தள்ளி விட்டதாகவும், அடித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நிர்வாகிகள் சுமூகமாக போவதாக கூறியதன் பேரில் போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிர்வாக தலைவர் கூறும்போது, இந்த கோயில் பாரம்பரியமிக்கது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை நிர்வாகம் மேற்கொள்ளும். யாருக்கும் ஆதரவாக இந்த நிர்வாகம் செயல்படாது என்றார். தவறு செய்த அர்ச்சகர்களை நீக்குவதில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.

The post அர்ச்சகர் சஸ்பெண்ட் விவகாரம் கோயில் நிர்வாகிகளுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vishwakarma ,Kalikampal temple ,Mannadi ,Karthik ,
× RELATED கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல்...