×

சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையில் கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து தொழிலாளி பலியான விவகாரத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (50). அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் நவ்ஷாத் ஷேக், குஸ்முதீன் ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் நல்ஷாத் ஷேக் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குஸ்முதீன் படுகாயமடைந்தார்.  தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், நல்ஷாத் ஷேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த குஸ்முதீனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பிரேத பரிசோதனை முடிந்து நல்ஷாத் ஷேக் உடல் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபடுத்திய அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் செல்வகுமார் (50), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் மதன்குமார் (32) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், காவல் நிலைய ஜாமீனில் இருவரையும் விடுவித்தனர்.

The post சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் கைது appeared first on Dinakaran.

Tags : Saram ,Annanagar ,Nadalkarai ,Selvakumar ,Choolaimedu ,Dinakaran ,
× RELATED பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்