×

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டி தெரு சந்திப்பு வரை நாளை முதல் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டி தெரு சந்திப்பு வரை சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளதால், வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது. எனவே வருகின்ற 18ம் தேதி(நாளை) முதல் 24ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:
* டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது.

* அத்தகைய வாகனங்கள் வடமலை தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு வழியாக செல்லலாம்.

* வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு ஆகிய தெருக்கள் ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

* பட்டாளம் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் அஸ்டபுஜம் சாலை வழியாக டவ்டன் சந்திப்பை நோக்கி செல்லும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

* புளியாந்தோப்பு மற்றும் ஓட்டேரி சந்திப்பிலிருந்து விஜிசி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Perambur Barracks Road ,CHENNAI ,Vadamalai Street Junction ,Kutty Street Junction ,Chennai Metropolitan Traffic Police ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...