×

இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல கொடுக்கல: பாஜ மீது மாயாவதி கடும் தாக்கு

லக்னோ: மக்களவை தேர்தலையொட்டி பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் ஒவ்வொரு பிரசாரத்திலும் பாஜ அரசின் இலவச ரேஷன் பொருட்கள் பற்றி பேசி வருகின்றனர். மேலும் இலவச ரேஷன் பொருள் 2029 வரை தொடரும் என பாஜ தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக இலவச ரேஷன் பற்றி பாஜவினர் பேசி வருகின்றனர்.

இலவச ரேஷன் பாஜ அரசின் கருணையோ, சலுகையோ அல்ல. இலவச ரேஷன் பொருளுக்காக பாஜவோ, அதன் தலைவர்களோ தங்கள் சொந்த பணத்தை தரவில்லை. அது மக்களின் வரிப்பணத்தில் இருந்தே தரப்படுகிறது. ஆனால் பாஜவினர் இலவச ரேஷன் பொருளுக்கு பதிலாக வாக்குகளை கடனாக கேட்டு வருகின்றனர். இது சரியல்ல” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல கொடுக்கல: பாஜ மீது மாயாவதி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Bahia ,Modi ,Bajaj government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் தோல்விக்கு...