×

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிஐ பதில் வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கவிதாவை அமலாக்கத்துறையினர் ஐதராபாத்தில் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கவிதா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதேவழக்கில் அமலாக்கத்துறைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 10ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிஐ பதில் வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Kavita ,Delhi High Court ,New Delhi ,Telangana ,chief minister ,Chandra Shekhara Rao ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில்...