×

ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது

கோவை: ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார். கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதயசங்கர் என்பவரிடம் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கொச்சியை சேர்ந்த ஜானி தாமஸ் (60), 5 மலையாள படங்களை தயாரிக்க போவதால், அதற்கு முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறி 2 கோடியே 75 லட்சத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக துவாரக் உதயசங்கர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில் ஜானி தாமஸ், அவரது மகன் ரான் ஜானி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் ஜானி தாமசை நெடும்பாசேரி விமான நிலையத்தில் கடந்த 14ம் தேதி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜானி தாமஸை கோவை அழைத்து வந்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவரது மகன் ரானி ஜானை தேடி வருகின்றனர்.

The post ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Johnny Thomas ,Kochi ,Dinakaran ,
× RELATED ஆம்னி பஸ் நடுரோட்டில் தீப்பற்றி...