×

காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

டெல்லி: காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கு கூடாது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கான உரிய அளவிலான காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியத்திற்கு உரிய பரிந்துரைகளை காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து உரிய பரிந்துரைகளை காவிரி ஒழுங்காற்று குழு , காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அளிக்கும். அவ்வாறு இன்று 96வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது என்றும், ஜூன் மாதம் கர்நாடகா அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க கோரி தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். பின்னர் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதியாக, காவிரியில் மே மாத இருப்புப்படி 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. வரும் 21ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்தில் இந்த பரிந்துரை எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் மீண்டும் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக எத்தனை டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்.

The post காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : M. ,C: Kaviri Water Management Committee ,Government of Karnataka ,Delhi ,Caviar ,Kaviri Water Management Committee ,C Water ,Tamil Nadu ,Caviar 2.5 ,T. M. ,Water ,Dinakaran ,
× RELATED எம்.ஜி.ஆர்-க்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து இருக்கேன் - Sathiyaraj speech at Mazhai Pidikatha Manithan.