×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினரை கைது செய்தனர்.

இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 போரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அல்லது காவலில் வைத்திருப்பது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளில் ஆயுதங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருந்தனரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Vedaranyam ,Nagai district ,Indian Navy ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்