×

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை

பாட்னா : பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகாரின் மதுபானி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது, “பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்குங்கள், கொலைகாரர்களை தலைகீழாக தூக்கிலிட்டு நிமிர்த்துவோம்” என கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி, பீகார் மாநிலம் மதுபானியில் நடந்த பேரணியில் ஒண்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என கூறினார். மேலும் அவர் கூறியுள்ளதாவது; “அன்னை சீதாவின் பூமி. இங்கு பசுக் கடத்தலையோ, படுகொலையையோ அனுமதிக்க மாட்டோம்.

பசு வதை வழக்குகள் இப்பகுதியில் இருந்து அதிக அளவில் வந்துள்ளன. பசுவதையை ஒருபோது ஏற்கமாட்டோம். பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் என பீகார் பரப்புரையில் அமித் ஷா பேசியுள்ளார். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்குங்கள், கொலைகாரர்களை தலைகீழாக தூக்கிலிட்டு நிமிர்த்துவோம். அணுகுண்டுக்கு பயப்பட முடியாத அளவுக்கு இந்தியா மிகவும் வலிமையானது” என கூறினார்.

The post பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amit Shah ,Patna ,Bihar ,Madhubani ,
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...